சிந்து மேனகா எழுதிய 'நாம் சத்தமாக சொல்லாதவை' நூல் வெளியீட்டு விழா
புதிய நூல்
உளவியலாளரும், கல்வியாளருமான சிந்து மேனகா எழுதிய முதல் நூலான ' நாம் சத்தமாக சொல்லாதவை - What We Don't Say Out Loud ' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியருடன் திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய்- முனைவர் திருமதி சுதா சேஷய்யன் - நடிகர் /இயக்குநர் கார்த்திக் குமார்- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் பி. கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்த புத்தகம் குறித்தும், அதன் சிந்தனையை தூண்டும் விசயங்கள் குறித்தும் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர் திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய், '' இந்த நூலில் பேசப்பட்டுள்ள விசயங்கள் ஆழம் மிக்கவை. அதனை நேர்மையுடன் எழுத்தாளர் விவரித்து இருப்பதால். வாசகர்கள் அதனுடன் ஒன்றிணைய வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

இந்த நூல் வெளியீட்டு விழா சாதாரண புத்தக வெளியீடாக இல்லாமல் சிந்தனைத்திறன்மிக்கவர்களின் அறிவுபூர்வமான கலந்துரையாடலாக அமைந்தது. மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவரும், சென்னை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான முனைவர் திருமதி சுதா சேஷையன், '' நாம் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் பேசப்படாமல் தவிர்க்கும் உணர்வுகளை இந்த நூலில் பேசப்பட்டிருப்பதையும்..
அதன் சூழலியல் பொருத்தத்தையும் தன்னுடைய வாழ்த்துரையில் குறிப்பிட்டார். நடிகரும், இயக்குநருமான கார்த்திக் குமார், ' நம் வாழ்வில் அனுபவிக்கும் விசயங்களை கடந்து செல்ல அல்லது கரைந்து போக எழுத்தாளரின் மனதுடன் இணைந்து செல்ல முடிகிறது' என இந்த புத்தகத்தில் இடம் பெற்ற விசயங்கள் குறித்த தனது எண்ணங்களை சுருக்கமாக பகிர்ந்து கொண்டார்.
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் கார்த்திகேயன், ''புத்தகத்தின் வெளியீட்டு செயல்முறை குறித்தும்... இந்த புத்தகம் வாசகர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணையும் என்ற நம்பிக்கையையும் ' தன்னுடைய வாழ்த்துரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடங்கி, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விசயங்கள் மற்றும் உணர்வு பூர்வமான ஆழம் குறித்த தொடர் சிந்தனைகளை பற்றியும்... இந்த புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள நிலவியல் பகுதிகளை பற்றியும் திருமதி ரோஸ்லின் செல்வம் ஆய்வு செய்து விவரித்தார்.
விருந்தினர்களின் வாழ்த்துரைக்கு பிறகு தன்னுடைய நிறைவு உரையில் எழுத்தாளர் சிந்து மேனகா,' இந்த புத்தகத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள சிந்தனை குறித்தும், அதன் செயலாக்கம் குறித்தும், விவரித்ததுடன் 'நாம் சத்தமாக சொல்லாதவை What We Don't Say Out Loud' எனும் இந்த நூல் - என்னுடைய இலக்கிய பயணத்தில் நான் மேற்கொண்ட முதல் முயற்சி ' என்பதையும் குறிப்பிட்டார்.
சென்னை மாநகரின் பிரபலமான புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா வாசகர்களிடையே ஓர் அமைதியான அதிர்வை ஏற்படுத்தியது. இது பெரும்பாலும் பேசப்படாமல் இருக்கும் உணர்வுகளை குறித்து பார்வையாளர்களையும் , வாசகர்களையும் சிந்திக்க வைத்தது.