தாலி கட்டும்போது வந்த போலீஸ்.. மறைந்த நடிகர் போண்டா மணி வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி
பிரபல காமெடி நடிகர் போண்டா மணி நேற்று இரவு திடீர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியது. அவர் வடிவேலு உடன் நடித்த பல காமெடி காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றவை.
60 வயதான அவர் சிறுநீரக பிரச்சனையில் அவதிப்பட்டு வந்தார். நேற்று திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கூட்டி சென்ற நிலையில், வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற்று இருக்கின்றன.

திருமணத்தை தடுக்க வந்த போலீஸ்
இலங்கையை பூர்வீகமாக கொண்ட போண்டா மணி இங்கு வந்து பணியாற்றிக்கொண்டிருந்த போது நடிகர் சிங்கமுத்து தான் எல்லா உதவிகளும் செய்வாராம்.
அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்த சிங்கமுத்து தினமும் மதியம் 25 ருபாய் கொடுத்து சாப்பிட சொல்வாராம். மேலும் அவர் போண்டாமணியை திருமணம் செய்ய சொன்னபோது 'இலங்கையில் இருந்து வந்த எனக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்க' என அவர் கூறினாராம். அனாலும் சிங்கமுத்து பெண் பார்த்து தானே மொத்த செலவையும் செய்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாராம்.

திருமணம் அன்று போண்டாமணி புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என சொல்லி யாரோ கூறியதால் போலீஸ் வந்து இறங்கிவிட்டதாம். கைதாவதற்கு முன்பு அவசரமாக அவர் தாலியை கட்டி திருமணத்தை முடித்திருக்கிறார். அதன் பின் போலீஸ் ஸ்டேஷன் சென்று போண்டாமணி இங்கே நடிக்க தான் வந்திருக்கிறார் என சிங்கமுத்து போலீசிடம் கூறி பிரச்னையை தீர்த்து வைத்தாராம்.
இந்த விஷயத்தை இன்று போண்டாமணி இறுதி அஞ்சலி செலுத்திய பின் சிங்கமுத்து உருக்கமாக கூறி இருக்கிறார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan