அட சிங்கப்பெண்ணே சீரியல் அன்புவா இது, தனது மனைவியுடன் ஓணம் ஸ்பெஷலாக எடுத்த போட்டோ... குவியும் லைக்ஸ்
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் சீரியல் சிங்கப்பெண்ணே.
கிராமத்தில் வாழ்ந்த ஆனந்தி என்ற பெண் தனது குடும்ப பொருளாதார பிரச்சனைக்காக சென்னைக்கு வேலை செய்ய வருகிறார். வந்த இடத்தில் நிம்மதியாக வேலை பார்க்க முடியாமல் அடுத்தடுத்து பிரச்சனைகளில் தவித்து வருகிறார்.
இப்போது கடந்த சில மாதங்களாகவே சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமான விவகாரம் தான் பரபரப்பின் உச்சமாக செல்கிறது.
போட்டோ
இந்த தொடரில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் அமல்ஜித்.
அவரது நிஜ பெயரை மறந்து மக்கள் இவரை அன்பு என்று தான் அடையாளப்படுத்தி வருகிறார்கள். தற்போது அமல்ஜித் தனது மனைவி பவித்ராவுடன் ஓணம் ஸ்பெஷலாக அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,