புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்... சன் டிவியில் எப்போது வரப்போகிறது?
சிங்கப்பெண்ணே
சன் டிவி, சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டாப் இடத்தில் இருக்கும் இந்த தொலைக்காட்சி டிஆர்பியை அடித்துக்கொள்ள இன்னும் எந்த டிவியும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவ்வப்போது விஜய் டிவி சீரியல் டாப் வரும், ஆனால் தொடர்ந்து வராது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள் போன்ற தொடர்கள் நாளுக்கு நாள் டிஆர்பியில் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

புதிய தொடர்
சன் டிவியில் விரைவில் ரேஷ்மா முரளிதரன் நடிப்பில் செல்லமே என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. தொடரின் புரொமோ வந்ததே தவிர மற்றபடி எப்போது ஒளிபரப்பாக உள்ளது போன்ற தகவல்கள் இன்னும் வரவில்லை.

அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. துளசி என்ற பெயரில் புதிய சீரியல் வரப்போகிறது, வரும் டிசம்பர் மாதம் முதல் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
இதில் சிங்கப்பெண்ணே சீரியலில் வில்லன் ரோலில் நடிக்கும் நடிகர் தான் நாயகனாக நடிக்கிறாராம், இதோ போட்டோ,