சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு வெள்ளித்திரையில் அடித்த லக்.. பாராட்டும் மக்கள்
சிங்கப்பெண்ணே
சன் டிவியில் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வரும் சீரியல் சிங்கப்பெண்ணே.
குடும்பத்தில் ஏற்பட்ட பண கஷ்டத்தால் சென்னைக்கு வந்து வளர நினைக்கும் ஒரு சாதாரண பெண் என்ன கஷ்டம் சந்திப்பால், என்னென்ன பிரச்சனைகள் வரும் என காட்டப்பட்டு வருகிறது.
தற்போது கதையில் ஆனந்தி அவருக்கே தெரியாமல் ஒருவரால் கர்ப்பமாகி உள்ளார், அவன் யார் என்று கண்டு பிடிக்கும் போராட்டத்தில் உள்ளார்.
நாயகி
இந்த தொடரில் ஆனந்தியின் நெருங்கிய தோழியாக நடிக்கும் காயத்ரி என்ற யோகலட்சுமிக்கு வெள்ளித்திரையில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதாவது தற்போது செம ஹிட்டாக ரசிகர்களின் பாராட்டு மழையில் உள்ள டூரிஸ்ட் பேமிலி படத்தில் சசிகுமார் மகனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார் யோகலட்சுமி.
தனக்கு கிடைத்த முதல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய யோகலட்சுமிக்கு வெள்ளித்திரையில் நல்ல வாய்ப்புகள் உருவாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
