எப்போது திருமணம், சிங்கப்பெண்ணே சீரியல் புகழ் அமல்ஜித் சொன்ன குட் நியூஸ்... வீடியோ இதோ
சிங்கப்பெண்ணே
கடந்த 2023ம் ஆண்டு சில புதுமுகங்களுடன் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் சிங்கப்பெண்ணே.
ஆனந்தி-அன்பு என்ற அழகிய ஜோடியின் காதல் கதையாக இப்போது தொடரின் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. அன்பு-ஆனந்திக்குள் ஒரு நெருக்கம் ஏற்படும் என்ற நோக்கில் மகேஷ் அவர்களுக்கு ஏற்காடு ஹனிமூனிற்காக அனுப்பி வைக்கிறார்.
ஆனால் அங்கு துளசி செல்ல ஆனந்தியை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

திருமணம்
சீரியல் இப்போது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வர சினிஉலகம் யூடியூப் பக்கம் சார்பாக தொடரின் நாயகன் அன்பு என்ற அமல்ஜித்திடம் பேட்டி எடுக்கப்பட்டது.

அவரது Home Tour இடையில் அமல்ஜித் தனது காதல் குறித்தும் திருமணம் பற்றியும் கூறியுள்ளார். நடிகை பவித்ராவும் நானும் அம்மன் தொடரில் நடிக்கும் போது காதலர்களாக மாறினோம், எனது வாழ்க்கையின் முக்கியமான நபர் அவர்.
நாங்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்ய பிளான் செய்துள்ளோம். மிகவும் சிம்பிளாக இருவரின் குடும்பங்கள் இணைய திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இதோ அமல்ஜித் சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்த பேட்டி,