சன் டிவியில் திடீரென மாற்றப்பட்ட புதிய சீரியலின் பெயர்- முழு விவரம் இதோ
சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதில் ரோஜா, வானத்தை போல, பூவே உனக்காக, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களுக்கு TRP அதிகமாக தான் இருக்கிறது.
ரோஜா சீரியல் தான் கடந்த சில மாதங்களாக முன்னிலையில் இருந்தது, ஆனால் நடுவில் கண்ணான கண்ணே, பூவே உனக்காக சீரியல்களும் டாப் ரேட்டிங்கில் வந்தன.
இந்த தொலைக்காட்சியில் ஏற்கெனவே நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய சீரியல்கள் வர இருக்கின்றன. கயல், சிங்கப்பெண்ணே போன்ற சீரியல்கள் வரப்போவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இப்போது என்ன விஷயம் என்றால் திருசெல்வம் இயக்கத்தில் தயாராகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாம்.
புதியதாக சீரியலுக்கு எதிர்நீச்சல் என்று பெயரிட்டுள்ளனராம்.