கூலி பட ரிலீசுக்கு விடுமுறை விட்ட நிறுவனம்.. டிக்கெட் உடன் 2000 ரூபாய் பணம் வேறயா
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் ரஜினி உடன் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
முன்பதிவிலேயே கூலி படம் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் முன்பதிவு பெரிய அளவில் இருக்கிறது.

லீவு விட்ட சிங்கப்பூர் நிறுவனம்
இந்நிலையில் சிங்கப்பூரில் இருக்கும் Farmers Constructions PTE LTD என்ற நிறுவனம் கூலி ரிலீசுக்காக விடுமுறை அறிவித்து இருக்கிறது.
பணியாளர்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து, உணவு செலவுக்காக கையில் 30 சிங்கப்பூர் டாலர் கொடுத்து அனுப்புகிறதாம் அந்த நிறுவனம். டிக்கெட் விலை சுமார் 25 டாலர், உணவுக்கு 30 டாலர் என மொத்தம் 55 சிங்கப்பூர் டாலர்கள் தரப்படுகிறது.
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    