சிங்கப்பெண்ணே சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சிங்கப்பெண்ணே. ஆனந்தி அன்புவின் வீட்டுக்கு சென்று வாழ்ந்து வந்தாலும் அவளை எப்படியாவது அன்புவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று தான் மாமியார் மற்றும் வில்லி துளசி இருவரும் முயற்சித்து வருகிறார்கள்.
கர்பமாக இருக்கும் பெண் என்று கூட பார்க்காமல் அவர்கள் பல மோசமான விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் அன்பு வீட்டுக்கு அவரது அக்காவின் மாமனார் - மாமியார் ஆகியோர் வருகிறார்கள். ஆனந்தி அங்கே இல்லை என்கிற விஷயம் அவர்களுக்கு தெரியவந்தால் கோகிலா வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைத்து அன்பு வருத்தத்தில் இருக்கிறார்.
ஆனால் அவரே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்கிறது. அன்புவின் அம்மா ஆனந்தியை அன்பாக பார்த்துக்கொள்வது போல நடிக்கிறார்.
அதை பார்த்து அன்பு கடும் ஷாக் ஆகிறார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? ப்ரோமோவை பாருங்க.