சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ! அன்புக்கு உண்மை தெரிஞ்சுபோச்சு..
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் பற்றிய பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்கிற உண்மையை கண்டறிய ஆனந்தி மற்றும் அவரது தோழிகள் முயற்சியில் இருக்கின்றனர். மறுபுறம் ஆனந்தி தன்னிடம் இருந்து விலகி இருக்க என்ன காரணம் என தெரிய உடன் வேலைபார்க்கும் சௌந்தர்யாவை ஆனந்தி ஹாஸ்டலில் தங்க வைக்கிறார் அன்பு.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என கண்டறிய முடியவில்லை, அதனால் அன்புவை பிரியலாம் என முடிவெடுக்கிறார்.
அதன் பின் சௌந்தர்யா ஆனந்தியை தனியாக அழைத்து சென்று பேசும்போது அவருக்கும் மொத்த உண்மையும் தெரியும் என கூறுகிறார்.
அவர்கள் பேசுவதை அன்பு கேட்டுவிடுகிறார். அவருக்கு ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்துவிட்டால் சீரியலில் என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
ப்ரோமோவை பாருங்க.