பெரிய உண்மையை கண்டுபிடித்த அன்பு - ஆனந்தி.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற உண்மையை தெரிந்துகொள்ள தற்போது அன்புவும் உதவி வருகிறார்.
ஆனந்தி பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள ரகு என்பவனை பிடித்தே ஆக வேண்டும் என அவனை அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் பின்தொடர்கிறார்கள்.
அடுத்த வார ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் அவனது அறைக்கே சென்று பிடித்துவிடுகிறார்கள். ஆனால் அவன் தள்ளிவிட்டு வெளியில் ஓடிவிட துரத்தி சென்று பிடிக்கிறார்கள்.
உண்மை தெரிந்துவிட கூடாது என்பதற்காக மறுபுறம் கருணாகரன் மற்றும் மித்ரா இருவரும் அவனை தேடி செல்கிறார்கள்.
ஆனால் அன்பு அவனை அடித்து உதைக்கு கேட்க, இறுதியில் கருணாகரன் தான் செய்ய சொன்னார் என அவன் கூறிவிடுகிறேன். இதனால் விரைவில் ஆனந்தி பிரச்சனை பற்றிய எல்லா உண்மையும் அவர்களுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.