அன்பு அம்மாவுக்கு பெரிய ஷாக்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிவிட்டாலும் இன்னும் ஆனந்தி அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அன்பு தன் வீட்டில் இருந்து வெளியேறி ஆனந்தியின் அக்கா கணவர் வீட்டில் தங்கி இருக்கிறார். ஆனந்தி தன்னை ஏற்றுக்கொண்டால் தான் சாப்பிடுவேன் என அவர் கூறி வருகிறார்.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் ஆனந்தி வந்து சாப்பாடு போடும் வரை சாப்பிட மாட்டேன் என அன்பு உறுதியாக இருக்கிறார். அதனால் மற்றவர்கள் ஆனந்தியிடம் பேசுகிறார்கள்.
ஆனால் அவர் ஏற்க மறுக்கிறார். மறுபுறம் அன்புவின் அம்மா கோவில் பூசாரியிடம் பேசும்போது, 'அன்பு வாழ்க்கையில் ஆனந்தியை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் இடம் இல்லை, அது பூர்வ ஜென்ம விஷயம்' என சொல்கிறார். அதை கேட்டு அன்புவின் அம்மா ஷாக் ஆகிறார்.
ஆனந்தி என்ன முடிவு எடுக்க போகிறார்? ப்ரோமோவை பாருங்க.
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu