அன்புவை வெளியில் அனுப்பிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மகேஷ் எல்லோரையும் ஏற்காடுக்கு ட்ரிப் அழைத்து செல்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் வில்லி துளசி அங்கு வந்து ஆனந்தியை கொலை செய்ய பார்க்கிறார். திருமணம் ஆனவர்கள் என்பதால் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் ஒரே அறையில் தான் தங்குகின்றனர்.

இன்றைய ப்ரோமோ
இன்றைய ப்ரோமோவில் ஆனந்தி அன்புவை ரூமை விட்டு வெளியில் போகும்படி சொல்கிறார். தன் மீது நம்பிக்கை இல்லாததால் 'இனி நீயே சொன்னாலும் இங்கே தங்கமாட்டேன்' என கூறிவிட்டு கோபமாக வெளியில் போகிறார் அன்பு.
மறுபுறம் மகேஷ் தான் மித்ராவை சின்ன வயதில் எப்படி பார்த்தேனோ அப்படி தான் தற்போதும் பார்ப்பதாக கூறுகிறார். இன்னும் லைப் பார்ட்னர் ஆக எல்லாம் உன்னை பார்க்கவில்லை என மகேஷ் நேரடியாகவே அவரிடம் சொல்கிறார். இன்றைய ப்ரோமோ இதோ.