யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ
சிங்கப்பெண்ணே
கடந்த 2023ம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் தான் சிங்கப்பெண்ணே.
500 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஆனந்தி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஒரு சீரியல்.
குடும்ப சூழ்நிலையால் சென்னைக்கு வேலை தேடி வந்த இவர் ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் நுழைந்து பணியாற்றி வருகிறார். தான் வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
புரொமோ
தான் பணம் சம்பாதித்து தனது அக்காவின் திருமணத்தை ஜாம் ஜாம் என நடத்துயுள்ளார்.
இன்றைய எபிசோடில் பல போராட்டங்களுக்கு பிறகு ஆனந்தி அக்காவின் திருமணம் நடக்கிறது. அந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அன்பு, ஆனந்தி கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்.
அதைக்கண்டு மண்டபத்தில் இருந்த அனைவரும் ஷாக் ஆகி விடுகிறார்கள்.