திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ
சிங்கப்பெண்ணே
ஒரு சீரியலில் நாயகி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வைத்து பல மாதங்கள் ஓட்டிவிட்டார்கள்.
அது என்ன தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தான். ஆனந்தி, கர்ப்பமானது அவரது தோழிகளுக்கும், வாடனுக்கும் மட்டுமே தெரியும்.
ஆனந்தி தனது அக்காவின் திருமணத்தை பிரச்சனைகள் இல்லாமல் எப்படியாவது முடித்துவிட வேண்டும் அதன்பின் தனது பிரச்சனையை பற்றி யோசிக்க இருந்தார்.
நேற்றைய எபிசோடில் ஆனந்தி அக்காவின் திருமணமும் படு கோலாகலமாக முடிந்துவிட்டது. கடைசியில் அன்பு, ஆனந்தி கழுத்தில் தாலி கட்டியது போல் காட்டப்பட்டது.
புரொமோ
ஆனால் இன்றைய எபிசோடின் புரொமோ பார்க்கும் போது ஆனந்தி-அன்பு திருமணம் யாருடைய கனவு என தெரியவில்லை. அதைவிட இன்றைய எபிசோடில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.
அதாவது வில்லன் மண்டபத்திற்கு வந்து ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.