சிங்கப்பெண்ணே சீரியல் ஹீரோவின் ஒரு நாள் சம்பளம், எவ்வளவு தெரியுமா
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் கயல், எதிர்நீச்சல், மூன்று முடிச்சு, மருமகள் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வரிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சிங்கப்பெண்ணே. சன் டிவியின் டாப் 5 TRP ரேட்டிங்கில் இந்த சீரியலும் இடம்பிடித்துள்ளது.
ஹீரோவின் சம்பளம்
அதுவும் தொடர்ந்து பல வாரங்களாக டாப் 5-ல் இந்த சீரியல் தனது இடத்தை தக்கவைத்து வருகிறது. சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் அமல் ஜித்.

இந்த நிலையில், ஹீரோ அமல் ஜித் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிங்கப்பெண்ணே சீரியலில் நடிக்க நடிகர் அமல் ஜித் ஒரு நாளைக்கு ரூ. 20,000 வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது