ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல்
சிங்கப்பெண்ணே
சன் டிவி, சீரியல்களுக்கு பெயர் போன இந்த தொலைக்காட்சியில் இப்போது ஒரு சீரியல் மிகவும் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அது என்ன தொடர் என்றால் அது சிங்கப்பெண்ணே சீரியல் தான். ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது குடும்பத்தினருக்கு அக்கா திருமணம் முடியும் வரை யாருக்கும் தெரிய கூடாது என இருந்தார்.
ஆனால் திருமணம் முடிந்த உடனேயே சுயம்பு மூலம் ஆனந்தியின் கர்ப்பம் பற்றி அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
பஞ்சாயத்து
இப்போது பஞ்சாயத்தில் ஆனந்தி கர்ப்பம் பற்றி விசாரணை நடக்கிறது.
ஆனந்தியின் அம்மா இந்த கர்ப்பத்திற்கு காரணம் அன்பு என்று கூறிவிடு என்கிறார், ஆனால் அவரோ இதற்கும், அன்புவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்.
அப்போது ஆனந்தி கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா என்கிற போக்கில் பேசுகிறார்கள். இதோ புரொமோ,