அழகன் நீ இல்லை என கண்டுபிடித்த ஆனந்தி, வர்புறுத்தி திருமணம் செய்யும் நந்தா- அதிரடியான சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக சிங்கப்பெண்ணே தொடர் ஒளிபரப்பாகிறது.
ஆனந்தி என்ற கிராமத்து பெண் குடும்ப சூழ்நிலைக்காக சென்னை வந்து எப்படி தான் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்கிறார் என்பதே கதையாக செல்கிறது.
இதற்கு இடையில் காதல் வர அதனால் இப்போது பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் இன்றைய எபிசோட் புரொமோவில் ஆனந்தி கோழை இல்லை, அவ்வளவு எளிதாக அவரை எமாற்றிவிடமுடியாது என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்.
இன்றைய புரொமோ
அழகன் நான் தான், நான் வேண்டும் என்றால் என்னை திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்று நந்தா என்னென்னவோ கூறி ஆனந்தியை கோவிலுக்கு வர வைக்கிறார்.
இன்னொரு பக்கம் அன்பு, நந்தா சூழ்ச்சிசெய்து ஆனந்தியை திருமணம் செய்ய இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார்.
இன்றைய புரொமோவில் நந்தா தாலி கட்ட வரும் போது நீயா எனது அழகன், நீ இல்லை என சண்டை போட நந்தா அவரை ஆட்களை வைத்து பிடித்து தாலி கட்ட முயற்சி செய்கிறார்.
அந்த நேரத்தில் அன்பு சரியாக அங்கு சென்றுவிடுகிறார். இப்போது இந்த சிங்கப்பெண்ணே புரொமோ யூடியூபில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.