அழகன் யார் என்பதை அதிரடியாக தெரிந்துகொண்ட ஆனந்தி- சிங்கப்பெண்ணே பரபரப்பான புரொமோ
சிங்கப்பெண்ணே
சன் டிவியில் தொடர் ஆரம்பித்தது முதல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சிங்கப்பெண்ணே சீரியல்.
கிராமத்தில் இருந்து சென்னை வரும் பெண் எவ்வளவு சவால்களை சந்திக்கிறார், பிரச்சனைகளை எப்படி தைரியமாக கடக்கிறார் என பெண்களை மையப்படுத்திய முழு கதையாக சிங்கப்பெண்ணே உள்ளது.
இதில் கடந்த சில வாரங்களாக நாயகியை அழ வைத்து வந்த இயக்குனர் அடுத்து அதிரடி காட்டுவார் என தெரிகிறது.
இன்றைய புரொமோ
இன்று ஒளிபரப்பாக போகும் எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் அன்பு வீட்டில் ஆனந்திக்கு பரிசு கொடுக்கப்பட அவரை கண்ட பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு உன் மகனுக்கு பெண் பார்த்துவிட்டாயா என ஆனந்தியை பார்த்து பேசுகிறார்கள்.
அதோடு அன்புவிடம் அவரது நண்பர் நீ தான் அழகனா என கேட்க ஆமாம் என அதிரடியாக ஒப்புக்கொண்டுள்ளார், அவர் கூறிய அடுத்த காட்சியில் ஆனந்தி வந்து நிற்கிறார்.
அழகன் உண்மையை ஆனந்தி தெரிந்துகொண்டாரா அல்லது கேட்கவில்லையா என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.