பல போராட்டத்திற்கு பிறகு ஆனந்தியிடம் தனது காதலை கூறிய மகேஷ், அன்பு ரியாக்ஷன்.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது சிங்கப்பெண்ணே தொடர்.
வாரா வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த தொடர் முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் நம்பர் 1 இடத்திற்கு விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் வர சிங்கப்பெண்ணே 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் சிங்கப்பெண்ணே தொடர் குழுவினர் விரைவில் கதையில் நல்ல மாற்றம் கொண்டு வருவார்கள் என தெரிகிறது.
இன்றைய எபிசோட்
இன்றைய சிங்கப்பெண்ணே எபிசோடில் என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மித்ரா, மகேஷை அன்புவிற்கு எதிராக தூண்டிவிடுகிறார்.
இன்னொரு பக்கம் மகேஷ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்திகிறார், அந்த நேரத்தில் அன்பு உள்ளே வருகிறார்.
மகேஷ் காதலை சொன்னதை அன்பு கேட்டாரா, ஆனந்தி பதில் என்ன என்பதை இன்று காண்போம்.