குழப்பத்தில் மித்ரா, காணாமல் போன தாலி, பதற்றத்தில் ஆனந்தி... சிங்கப்பெண்ணே சீரியல்
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியல், சன் தொலைக்காட்சியில் டிஆர்பியின் டாப்பில் இருக்கும் தொடர்.
குடும்ப சூழ்நிலைக்காக சென்னை வந்து போராடும் ஆனந்தி என்ற பெண்ணை மையப்படுத்திய கதை தான் இந்த சிங்கப்பெண்ணே. ஆனந்தி கர்ப்பமாக இருந்தாலும் நான் அவளை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்த அன்பு அவரை திருமணமும் செய்துவிட்டார்.

ஆனந்தி இது திருமணமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஒரு சுமையாக சுமப்பேன் என்று கூறி வருகிறார். இதற்கு இடையில் மகேஷை காலி செய்ய ஒரு பிளான் நடக்கிறது, ஆனால் எதிர்ப்பாரா விதமாக அன்பு அவரை காப்பாற்றிவிடுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், மகேஷிற்கு இப்படி ஆனதற்கு காரணம் அந்த ராஸ்கல் தான் காரணமாக இருப்பானோ என சந்தேகமாக இருப்பதாக தனது அம்மாவிடம் கூறுகிறார்.

பின் ஜெயந்தி, ஆனந்தியை கவனிக்கும் போது அவரது கழுத்தில் தாலி இல்லை என்பதை கேட்க ஆனந்தி பதற்றம் அடைகிறார். இதோ புரொமோ,