மிரட்டிய மித்ரா, ஆனந்தி அவரை பற்றி தெரியவந்த ஷாக்கிங் தகவல்... சிங்கப்பெண்ணே சீரியல் ஸ்பெஷல் புரொமோ
சிங்கப்பெண்ணே
ஆனந்தி கர்ப்பத்திற்கு காரணம் யார் என்ற கேள்வியை வைத்தே இந்த சீரியல் கதைக்களத்தை பல மாதங்கள் ஓட்டி வருகிறார்கள்.
முதலில் கர்ப்பத்தின் அதிர்ச்சி, பின் தோழிகளுக்கு தெரிய வந்தது, அடுத்து காதலனுக்க தெரிந்தது. கடைசியில் ஆனந்தியின் அக்கா திருமணத்தில் ஊருக்கே தெரியவந்தது.
மகேஷ் எப்படியோ போராடி அன்பு-ஆனந்தி திருமணத்தை செய்து வைத்தாலும் கர்ப்பத்திற்கு யார் காரணம் தெரியாமல் என்னால் வாழ முடியாது என ஆனந்தி, அன்புவை விட்டு தள்ளியே இருக்கிறார்.

புரொமோ
கடைசியாக கதைக்களத்தில் ஏற்காடு காட்சிகள் இடம்பெற்றன. ஆனந்தி-அன்பு, ரகுவை ஏற்காடில் பார்த்தும் அவரை பிடிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனால் அவரை அடித்து புதைத்தும்விட்டார் கருணாகரன்.

தற்போது சிங்கப்பெண்ணே சீரியலின் ஸ்பெஷல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மித்ரா, ரகு மனைவியை நேரில் சந்தித்து புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என மிரட்டுகிறார்.
இந்த விஷயத்தை ரகு மனைவி ஆனந்திக்கு போன் செய்து கூற மித்ராவா இப்படி செய்கிறார் என ஷாக் ஆகிறார் ஆனந்தி.