அழகன் என நினைத்து நந்தாவை திருமணம் செய்ய துணிந்த ஆனந்தி... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பான இன்றைய எபிசோட்
சிங்கப்பெண்ணே
டிஆர்பி டாப்பில் வரும் தொடர் என்றாலே மக்கள் அதை அதிகம் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
தெரிந்த நடிகரா, இயக்குனரா என்பது எல்லாம் இப்போது மக்கள் பார்ப்பது இல்லை, கதை நன்றாக இருக்கிறதா என்றால் வரவேற்பு தருகிறார்கள்.
அப்படி நிறைய புதுமுகங்கள் நடிக்க சன் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொடர் தான் சிங்கப்பெண்ணே.
தனது குடும்ப சூழ்நிலையை சமாளிக்க கிராமத்தில் இருந்து சென்னை வரும் பெண்ணின் போராட்டமே இந்த தொடர் கதையாக உள்ளது.
பரபரப்பு புரொமோ
கடிதங்கள் மூலம் அழகன் என்ற ஒருவரை காதலித்த ஆரம்பித்த ஆனந்தி இப்போது பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். அன்பு அழகனாக ஆனந்திக்கு கடிதங்கள் அனுப்ப அதை நந்தா தவறாக பயன்படுத்தி இப்போது திருமணம் வரை சென்றுவிட்டார்.
மகேஷ் ஆனந்தி வேறு ஒருவரை காதலிக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு கோவிலுக்கு வருகிறார். இன்னொரு பக்கம் அன்பு நந்தா தான் ஆனந்தியை தவறாக வழிநடத்துகிறார் என்பதை கண்டுபிடித்து கோவிலுக்கு வருகிறார்.
நந்தா அவர் போட்ட பிளான் வெற்றியடையும் வகையில் தாலி எடுத்து ஆனந்தி கழுத்தில் கட்ட செல்கிறார். இன்றைய எபிசோடின் பரபரப்பான புரொமோ இதோ,