ஆனந்தி பிறந்தநாளுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த அன்பு- சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
நிறைய புதுமுகங்கள் நடிக்க இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனந்தி என்ற பெண் தனது குடும்ப சூழ்நிலைக்காக சென்னை வருகிறார், வேலைக்கு வந்த இடத்தில் அவருக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது.
அந்த பிரச்சனைகளை எப்படி அவர் சமாளிக்கிறார் என்பதை பற்றியே கதை நகர்கிறது. கடைசியாக ஆனந்தி, அழகன் என்று கடிதத்தில் வந்தரை நினைத்து பெரிய பிரச்சனையில் சிக்க பார்த்தார்.
ஆனால் அவரை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிட்டார் அன்பு.
இன்றைய எபிசோட்
நந்தா ஆனந்தியை ஏமாற்றி திருமணம் செய்ய சென்ற விஷயம் கடைசியாக பரபரப்பாக சிங்கப்பெண்ணே தொடரில் ஒளிபரப்பானது.
தற்போது மிகுந்த மன கஷ்டத்தில் இருக்கும் ஆனந்தியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அன்பு ஒரு சூப்பர் பிளான் போட்டு அதை செயல்படுத்திகிறார். இதோ அந்த ஸ்பெஷல் எபிசோடின் புரொமோ,