அன்புவை காதலிக்கும் உண்மையை கூறிய ஆனந்தி, கோபத்தில் மகேஷ் முடிவு... சன் டிவியின் சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ
சிங்கப்பெண்ணே
சன் டிவி என்றாலே சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி.
இதில் இப்போது ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் 2 போன்ற சீரியல்கள் டிஆர்பியில் வாரா வாரம் மாஸ் காட்டி வருகிறது.
டிஆர்பியில் குறையும் தொடர்களை உடனே தூக்கி விடுகிறார்கள், அதே வேகத்தில் புத்தம் புதிய சீரியல்களையும் களமிறக்கிவிடுகிறார்கள்.
புரொமோ
இப்போது ஒரு சீரியலின் பரபரப்பான புரொமோ தான் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. முக்கோண காதல் கதையாக ஒளிபரப்பாகி வரும் சன் டிவியின் சிங்கப்பெண்ணே தொடரில் நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த காதல் விஷயம் வெளியே வந்துள்ளது.
அதாவது மகேஷ் தன்னிடம் நெருங்கி வருவதை பொறுத்துக் கொள்ளாத ஆனந்தி அன்புவை காதலிக்கும் விஷயத்தை கூறிவிடுகிறார். இதனால் கோபத்தில் மகேஷ், அன்புவை அடித்து கம்பெனி விட்டு வெளியே அனுப்புகிறார்.
நிஜமாகவே நடப்பதா அல்லது யாருடைய கனவா இது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
