கதறிய ஆனந்தி.. ஊர் பஞ்சாயத்து எடுத்த முடிவு! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ
சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் ரசிகர்கள் எல்லோரும் பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த அந்த ஒரு சம்பவம் நடந்து விட்டது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல் மொத்த ஊருக்கும் தெரிய வந்துவிட்டது.
ஆனந்தியின் அக்கா திருமண நிகழ்ச்சியில் வில்லன் சுயம்புலிங்கம் அவரது கர்ப்பம் பற்றிய தகவலை எல்லோரும் சொல்லி உடைத்து விடுகிறார். ஒருகட்டத்தில் ஆனந்தி அதை ஒப்புக்கொள்கிறார்.
நாளைய ப்ரோமோ
இந்நிலையில் சீரியலின் நாளைய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என ஊர் பஞ்சாயத்தை வில்லன் கேட்கிறார்.
ஏற்கனவே ஒரு பெண் திருமணம் ஆகாமல் கர்ப்பமானத்திற்கு அந்த பெண்ணை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டீர்கள், இவருக்கு என்ன செய்யப் போகிறீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்தும் அன்பு அவரை தனது மனைவியாக ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஆனால் அன்புவின் அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
ஆனந்தி விஷயத்தில் ஊர் பஞ்சாயத்து எடுத்த முடிவு காரணமாக அவர் கதறி அழுகிறார். தனது அப்பாவை போய்விடும் படி கெஞ்சுகிறார். அப்படி பஞ்சாயத்து என்ன முடிவு எடுத்தது என்பது நாளை எபிசோடில் பார்க்கலாம். ப்ரோமோவை இப்போது பாருங்கள்.

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu
