Singeetham Srinivasa Rao: பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் 95-வது வயதில் காலமானார்

By Karthick Raja Oct 04, 2026 03:00 AM GMT
Report

Singeetham Srinivasa Rao Passed Away: பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் தனது 95-வது வயதில் காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கீதம் சீனிவாசராவ்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான மூத்த இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாசராவ். இயக்குநர் மட்டுமின்றி தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

Singeetham Srinivasa Rao: பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் 95-வது வயதில் காலமானார் | Singeetham Srinivasa Rao Passed Away

இன்று எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பு இல்லை.. காரணம் இதுதான்

இன்று எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பு இல்லை.. காரணம் இதுதான்

தமிழில் வெளியான மகளிர் மட்டும், காதலா காதலா, அபூர்வ சகோதரர்கள், ராஜாபார்வை, மைக்கேல் மதன காமராஜன், லிட்டில் ஜான் ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Singeetham Srinivasa Rao: பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் 95-வது வயதில் காலமானார் | Singeetham Srinivasa Rao Passed Away

எனக்கு குழந்தை இல்லை, ஆனால்.. VJ ரம்யா சுப்ரமணியன் சொன்ன விஷயம்

எனக்கு குழந்தை இல்லை, ஆனால்.. VJ ரம்யா சுப்ரமணியன் சொன்ன விஷயம்

இந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த சிங் கீதம் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. 90 வயதை கடந்த பிறகும் கூட, இப்படியொரு சுவாரஸ்யமான கதைக்களத்தில் விறுவிறுப்பான திரைக்கதையோடு ஒரு படத்தை தரமுடியுமா என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்த அளவிற்கு மிகவும் திறமைசாலியான இயக்குநர்களில் சிங்கீதம் சீனிவாசராவ்வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 3) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார். இவருக்கு வயது 95. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Singeetham Srinivasa Rao: பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் 95-வது வயதில் காலமானார் | Singeetham Srinivasa Rao Passed Away

சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US