திடீரென போலீசில் புகார் கொடுத்த சின்மயி! கணவர் பெயரை கெடுக்க சதி
பாடகி சின்மயி மீடு புகார் கொடுத்த தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் அவர்.
இந்நிலையில் தற்போது அவர் சென்னை அபிராமபுரம் போலீசில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் அவரது கணவர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் நபர் பற்றி புகார் சொல்லி இருக்கிறார்.
மார்பிங் செய்த நபர்
சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடிகர் மட்டுமின்றி படங்கள் இயக்கவும் செய்திருக்கிறார். அவர் நடத்தி வரும் போட்டோஷூட் கம்பெனி பெயரை வைத்து பெண் குழந்தைகள் போட்டோவை மார்ப் செய்து தேவ் ராகுல் என்ற நபர் வெளியிட்டு வருவதாக புகாரில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
சின்மயியின் புகார் பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
