பாடகி சின்மயி இரட்டை குழந்தைகளின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்- குவியும் லைக்ஸ்
பாடகி சின்மயி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள் என்கிற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் டைட்டில் வின்னரானவர் பாடகி சின்மயி.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தான் அவரது முதல் திரைப்பட பாடல்.
அதன்பின் டி.இமான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஜிவி பிரகாஷ் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருடன் பணியாற்றி புகழ்பெற்ற பின்னணி பாடகியாக வலம் வந்தார்.
பாடகியாக மட்டுமில்லாது சிறந்த டப்பிங் கலைஞராக சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா என பல நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
இரட்டை குழந்தைகள்
பாடகி சின்மயி 2014ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் ராகுல் தனது மகள் மற்றும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
