பாடகர்
பிரபல பின்னணி பாடகர் ஜூபின் நௌடியால் (Jubin Nautiyal) படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
கடந்த வாரம் தான் அவர் துபாயில் ஒரு பெரிய கான்செர்ட் நடத்தி இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து இருந்தது. அடுத்து வரும் பண்டிகை கால சீசனுக்கு நல்ல தொடக்கம் இது என அவர் பேட்டி அளித்து இருந்தார். இந்த நிலையில் தான் அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
Tu Saamne Aaye, Manike,Bana Sharabi உள்ளிட்ட அவரது சமீபத்திய பாடல்கள் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விபத்து
நேற்று காலை இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. அவருக்கு முழங்கை உடைந்து, விலா எலும்பில் விரிசல் வந்திருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் அவரது தலையிலும் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் ஒரு கையை சில காலத்திற்கு அவர் பயன்படுத்தமுடியாது, சரியாகும் வரை அவரை கையை அசைக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்களாம்.
திருமணத்திற்கு முன்பே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மையா? மஞ்சிமா மோகன் விளக்கம்

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
