பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லையா, இப்படியா ஆனது?- அவரது மகள் கூறிய விஷயம்
கல்பனா
ஒரு படம் உருவாகி வெளியாக நடிகர்களை தாண்டி அவர்களுக்கு பின்னால் பணிபுரியும் கலைஞர்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி தான் பாடகர்களும், ஒரு பாடல் செம ஹிட்டடிக்க பாடுபவர்களின் திறமையும் உள்ளது.
அப்படி சில ஹிட் பாடல்கள் பாடி பிரபலமானவர் தான் கல்பனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி இருக்கிறார்.
நேற்று, மார்ச் 4, இவர் தனது ஹைதராபாத் வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போதைய நிலை
இந்த நிலையில் பாடகி கல்பனா சுயநினைவுக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில் பாடகி கல்பனாவின் மகள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை, அவர் தினமும் எடுக்கும் மாத்திரையில் கொஞ்சம் Over Dose ஆகிவிட்டது.
மற்றபடி எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
