மாயக்குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் Kj யேசுதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல்
கே.ஜே.யேசுதாஸ்
பின்னணி பாடகர்கள், அவர்களுக்கு எப்போதுமே மக்கள் மனதில் ஒரு தனி இடம் இருக்கும்.
அப்படி சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் பாடி அசத்தியுள்ளவர் தான் கே.ஜே.யேசுதாஸ்.
1962ல் வெளியான மலையாள படமான கால்பாடுகல் என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் தமிழில் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொம்மை என்கிற படத்தில் பாடல்கள் பாடி தமிழ் பக்கம் வந்தார்.
அப்போது ஆரம்பித்த பயணம் தமிழில் மட்டுமே 700க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
தமிழ், மலையாளத்தை தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய் மொழி, அரேபிய மொழி, லத்தின், ஆங்கிலம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
சொத்து மதிப்பு
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவை தாண்டி சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் சொந்த வீடு வைத்துள்ள யேசுதாஸ் விலையுயர்ந்த கார்களையும் வைத்துள்ளார்.
பல ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் யேசுதாஸின் சொத்து மதிப்பு ரூ. 15 முதல் ரூ. 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.