தமிழில் பல ஹிட் பாடல்கள் கொடுத்த பாடகர் கேகே திடீர் மரணம்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
பிரபல பாடகர் கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு 10.30 மணி அளவில் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்கிற செய்தி இந்தியா முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 53.
கொல்கத்தாவில் அவர் ஒரு concertல் பாடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்று இருக்கின்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கேகே தமிழிலும் எக்கச்சக்கமான பாடல்கள் பாடி இருக்கிறார். எம் குமரன் படத்தில் வரும் ’நீயே நீயே’, காக்க காக்க படத்தின் ‘உயிரின் உயிரே’ உள்ளிட்ட பல பாடல்களை கேகே பாடி இருக்கிறார்.
அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சின்மயி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
My “Uyirin Uyire” passed away. RIP Singer KK. What a shocking news to hear when the whole world is praising his last song “Konji Konji”. I am completely shattered and my condolences to his family and friends. @jdjeryofficial @thinkmusicindia @SonyMusicSouth
— Harris Jayaraj (@Jharrisjayaraj) May 31, 2022
There is no way to make sense of this. What a terrible couple of days for music.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 31, 2022
His song rings true now and how.
Rest in Peace, KK.
Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022