பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க
எல்.ஆர்.ஈஸ்வரி
எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் நிறைய பாடல்கள் பாடி மக்கள் மனதை வென்றவர்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாச மலரின் வாராய் என் தோழி வாராயோ எனும் அசத்தலான பாடல் மூலம் அதிகம் அறிப்பட்டவர். கறுப்புப் பணம் படத்தில் இடம்பெற்ற ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடல் மூலம் மேலும் பிரபலமானார்.
பளிங்கினால் ஒரு மாளிகை (வல்லவன் ஒருவன்), அதிசய உலகம் (கௌரவம்) என அடுத்தடுத்து பாடல்கள் பாடி பிரபலமாகி வந்தவர் அம்மன் பாடல்கள் பாடி மாஸ் காட்டி வந்தார். அம்மன் பாடல்கள் என்று சொன்னாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி தான் நியாபகம் வருவார்.

லேட்டஸ்ட்
சினிமா பாடல்கள், பக்திப் பாடல்கள் என பாடியவர் இப்போதெல்லாம் அவ்வளவாக தொடர்ந்து பாடல்கள் பாடுவது இல்லை.
இந்த நிலையில் லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட எல்.ஆர்.ஈஸ்வரியின் புகைப்படம் வெளியாக அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும் கால் வலி பிரச்சனையால் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக பாடகி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
