அங்கப்பிரதட்சணம் செய்தீர்களே மதம் மாறிவிட்டீர்களா என கேட்ட பயில்வான் ரங்கநாதன்... பாடகர் மனோ தரமான பதிலடி
பாடகர் மனோ
பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் மனோ.
ஆந்திர மாநில அரசியல் நந்தி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் இவர் பாடிய முக்காலா முக்காபுலா, தில்லானா தில்லானா, அழகிய லைலா, அட உச்சந்தல உச்சியிலே, தூளியிலே ஆடவந்த போன்ற பாடல்கள் எல்லாம் செம சூப்பர் டூப்பர் ஹிட்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிறைய சீசன்களில் நடுவராக கலந்துகொண்டு செமயாக கலக்கினார். Strict நடுவராக இல்லாமல் ஜாலியான ஒரு நடுவராக இருந்தார்.

அதிரடி பதில்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் மனோவிடம் பயில்வான் ரங்கநாதன், நீங்க இந்துவா மாறீட்டீங்களா? சமீபத்தில் கோவிலுக்கு போய் அங்கப்பிரதேசம் பண்ணி இருக்கீங்க என்று கேட்டுள்ளார்.

அதற்கு மனோ, நானா? பாடகர் எல்லாருக்கும் சொந்தம், நான் இந்து, நான் முஸ்லீம், நான் கிரிஸ்துவன்.
நான் எல்லா இடத்துக்கும் போவேன் என் பாட்ட எல்லாரும் தான் கேக்குறாங்க, எல்லா மதமும் சம்மதம், அதுக்கும் மேல நான் முதலில் மனுஷன் என பதில் கூறியுள்ளார்.