ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை நான் ஆனால்.. பாடகி கெனிஷா சொன்ன ரகசியம்
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் கலந்துகொண்டதால், அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கடுப்பான ஆர்த்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் தன் குழந்தைகள் குறித்தும் அவரது திருமணம் வாழ்க்கை குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
கெனிஷா
இந்நிலையில், பாடகி கெனிஷா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " எனக்கு ஜெயம் ரவி மிகவும் பிடிக்கும், நான் அவருடைய பெரிய ரசிகை. என்னுடைய பாடல் நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி தான் ஹெஸ்டாக வந்தார்.
அப்போது நான் அவர் முன்பு தான் பாடப்போகிறேன் என்பது தெரியாது. நான் மேடையில் பாடி முடித்த பின் யாரும் கைதட்டவில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பின் ரவி தான் அவர் பேச்சால் அனைவரையும் கை தட்ட வைத்தார்" என்று தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
