ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.. பாடகர் P.ஜெயச்சந்திரன் மறைவு! சோகத்தில் தமிழ் ரசிகர்கள்
தென்னிந்திய மொழிகளில் 15000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பவர் பி.ஜெயச்சந்திரன். அவர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
80 வயது ஆகும் அவர் உடலநலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த நிலையில் உயிர் பிரிந்தது.

பல சூப்பர்ஹிட் பாடல்கள்..
ஜெயச்சந்திரன் தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். மூன்று முடிச்சி படத்தில் 'வசந்தகால நதிகளிலே', ஒருதலை ராகம் படத்தில் வரும் 'கடவுள் வாழும் கோவிலிலே', ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.. போன்ற பாடல்களில் தொடங்கி அவரது பாடல்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும்.
பூவே உனக்காக படத்தில் 'சொல்லாமலே யார் பார்த்தது', வானத்தைப்போல படத்தில் 'காதல் வெண்ணிலா கையில் சேருமா', கிரீடம் படத்தில் 'கனவெல்லாம் பலிக்குதே' போன்ற 90ஸ் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.
ஜெயச்சந்திரத்தின் மரணம் தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அவரது ஹிட் பாடல்களை குறிப்பிட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
