20 மொழிகளில், 48,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி.. 4 முறை தேசிய விருது!! எஸ். ஜானகி செய்த சாதனைகள்

By Karthick Raja Jul 12, 2026 06:10 AM GMT
Report

எஸ். ஜானகி மறைவு

ரசிகர்களால் கொண்டாடப்படும்பின்னணி பாடகிகளில் ஒருவர் எஸ். ஜானகி. இசை உலகில் ராணியாக திகழ்ந்து வந்த இவர் தனது 88 வயதில் காலமானார். பல தலைமுறைகளை கடந்து இவருடைய பாடல்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள நிலையில், இவருடைய மரணம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. 

20 மொழிகளில், 48,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி.. 4 முறை தேசிய விருது!! எஸ். ஜானகி செய்த சாதனைகள் | Singer S Janaki Achievements In Cinema

கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய ஒரே மகன் முரளி கிருஷ்ணா மாரடைப்பால் காலமானதை அவர் துயரத்தில் ஆழ்த்தியது. மகனை பறிகொடுத்த வேதனையோடு மைசூருவில் வாழ்ந்துவந்த எஸ். ஜானகி உடல்நல குறைவால், சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ஜானகி அவர்கள் காலமானதாக மைசூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

20 மொழிகளில், 48,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி.. 4 முறை தேசிய விருது!! எஸ். ஜானகி செய்த சாதனைகள் | Singer S Janaki Achievements In Cinema

Dhamaal 4: திரை விமர்சனம்

Dhamaal 4: திரை விமர்சனம்

மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 4 மணி வரை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்காக ஜானகி அவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், எஸ். ஜானகி அவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதையும் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார்.

20 மொழிகளில், 48,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி.. 4 முறை தேசிய விருது!! எஸ். ஜானகி செய்த சாதனைகள் | Singer S Janaki Achievements In Cinema

சினிமா பயணம்

1938-ஆம் ஆண்டு பிறந்த எஸ். ஜானகி தனது 3 வயதிலேயே இசை கற்க தொடங்கி, 9 வயதிலேயே மேடை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். 1957-ஆம் ஆண்டு வெளிவந்த மகதலநாட்டு மேரி திரைப்படத்தில் தனது முதல் பாடலை பாடினார். இதன்பின் தொடர்ந்து அதே ஆண்டில் 6 மொழிகளில் பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எஸ். ஜானகி அனைவரையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பாடல் என்றால் அது கொஞ்சும் சலங்கை திரைப்பட பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

20 மொழிகளில், 48,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி.. 4 முறை தேசிய விருது!! எஸ். ஜானகி செய்த சாதனைகள் | Singer S Janaki Achievements In Cinema

60 ஆண்டுகளாக பாடி வரும் எஸ். ஜானகி, எஸ்.எஸ். விஸ்வநாதனின் இசையில் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் என 4 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். மேலும், 20 மொழிகளில், சுமார் 48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ள ஒரே பாடகியும் இவரே ஆவார். 4 முறை தேசிய விருதும், 30-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வென்றுள்ளார். தமிழில், 16 வயதிலே படத்தில் இடம்பெற்ற செந்தூர பூவே பாடலுக்கும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்கும் தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

20 மொழிகளில், 48,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி.. 4 முறை தேசிய விருது!! எஸ். ஜானகி செய்த சாதனைகள் | Singer S Janaki Achievements In Cinema

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US