விவாகரத்து குறித்து வந்த மோசமான விமர்சனங்கள்- சைந்தவி போட்ட சோகமான பதிவு
ஜி.வி-சைந்தவி
பிரபலங்களின் விவாகரத்து செய்தி என்பது ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸாக அமைந்துவிடுகிறது.
அப்படி அண்மையில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் தங்களது விவாகரத்து செய்தியை அறிவித்தார்கள். அவர்கள் அந்த விஷயத்தை அறிவித்ததில் இருந்து நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
இதனால் தான் விவாகரத்து செய்தார்கள், அந்த விஷயத்தால் தான் பிரிந்தார்கள் என நிறைய விஷயங்கள் கூறப்பட்டது. இதனால் ஜி.வி.பிரகாஷ் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
அதில் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன என்றும் தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா என்றும் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
சைந்தவி பதிவு
இந்த நிலையில் பாடகி சைந்தவி தனது இன்ஸ்டா பக்கத்தில், எங்கள் தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுகோள் வைத்தும் பல யூடியூன் சேனல்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலை கொண்டு கட்டுக்கதைகளை உருவாக்குவது மன உளைச்சலைத் தருகிறது.
எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை, எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது.
பள்ளி காலத்தில் இருந்தே ஜி.வியும் நானும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இனியும் அந்த நட்பைத் தொடர்வோம் நன்றி என தெரிவித்துள்ளார்.
— Saindhavi (@singersaindhavi) May 16, 2024

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
