புதிய தொழிலை தொடங்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி- இதோ புகைப்படங்கள்

By Yathrika Oct 07, 2022 02:20 PM GMT
Report

ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமா கொண்டாடும் பிரபலங்களில் ஒருவர் ஜி.வி. பிரகாஷ் குமார். ஏ.ஆர். ரகுமானின் உறவினர் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.

இசையமைப்பாளராக பல பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜி.வி. பிரகாஷ் நடிகராகவும் கலக்கி வருகிறார், ஆனால் நடிகராக அவர் இன்னும் சரியான ஹிட்டை பார்க்கவில்லை.

அண்மையில் அவருக்கு சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது, அனைவருமே அதற்காக அவருக்கு வாழ்த்து கூறினர்.

புதிய தொழிலை தொடங்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி- இதோ புகைப்படங்கள் | Singer Saindhavi Started New Recording Studio

சைந்தவி புதிய தொழில்

ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது என்னவென்றால் சைந்தவி ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளார்.

சவுண்ட்ஸ் ரைட் என்ற பெயரில் ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். இந்த ஸ்டூடியோவின் திறப்பு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, சீன் ரோல்டன், ஸ்ரீநிவாஸ், ஹரி சரண், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சில வருட கனவு கொரோனாவால் நின்றுவிட்டதாகவும் தற்போது நிறைவேறிவிட்டதாக சைந்தவி கூறியிருக்கிறார்.

புதிய தொழிலை தொடங்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி- இதோ புகைப்படங்கள் | Singer Saindhavi Started New Recording Studio

நடிகர் பிரசாந்த் அப்பாவை தெரியும், அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US