அனிருத் போட்டியாக பாலிவுட்டில் களமிறங்கும் முன்னணி இசையமைப்பாளர்.. மாஸ் அப்டேட்
சந்தோஷ் நாராயணன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் உதவியாளராக பணியை துவங்கியவர் சந்தோஷ் நாராயணன். அதன்பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்.
முதல் படமே வெற்றிக்கொடுக்க பீட்சா, சூது கவ்வும், மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, கபாலி, காலா, வட சென்னை என பல படங்களின் இசையமைத்து அதன் மூலம் டாப் பிரபலமாக வளர்ந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுக்குத் இசையமைத்த சந்தோஷ் கடைசியாக கல்கி 2898 AD படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
மாஸ் அப்டேட்
இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது அனிருத் போன்று பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சந்தோஷ். அதாவது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் இசையமைக்க உள்ளார்.
இதனால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது, சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யா 44 படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
