நான் அந்த தவறு செய்யாமல் இருந்திருந்தால் அப்பா இருந்திருப்பார்- எஸ்பிபியின் மகள் பல்லவி எமோஷ்னல்
எஸ்.பி பாலசுப்ரமணியம்
எஸ்பிபி என்று சொன்னதுமே எத்தனையோ பாடல்கள் நமது நினைவில் வந்துவிடும்.
கோடான கோடி இசைபிரியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த எஸ்பிபி அவர்கள் இன்று நம்மோடு இல்லை.
எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்தில் முதல் பாடலை பாடி வெற்றிப்பெற்ற எஸ்பிபி தொடர்ந்து சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், மோகன் என பல முன்னணி நடிகர்களுக்கு பாடியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 16 மொழிகளில் பாடியிருக்கிறார். இவர் வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லலாம்.
மகளின் பேட்டி
அண்மையில் எஸ்பிபி அவர்களின் மகள் பல்லவி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், எனது தந்தை கொரோனா காலத்தில் ஹைதராபாத் சென்றார், அங்கு தான் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர் அங்கு செல்ல வேண்டாம் என்று நான் கூறியிருந்தால் கண்டிப்பாக அப்பா இன்று இருந்திருப்பாரோ என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது, அவரை அனுப்பியது தவறு, அது செய்யாமல் இருந்திருந்தால் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.
You May Like This Video

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
