பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் மகளை பார்த்துள்ளீர்களா.. அவரும் பாடகி தான்
ஸ்ரீநிவாஸ்
தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் ஸ்ரீநிவாஸ்.
இவர் குரலில் வெளிவந்த ஆப்பிள் பெண்ணே, மின்சார கண்ணா, வை ராஜா வை, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ச ரி க ம பா' நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.
ஸ்ரீநிவாஸ் மகள்
இவருக்கு சரண்யா ஸ்ரீநிவாஸ் எனும் மகள் ஒருவர் உள்ளார். தந்தையை போல் இவரும் பின்னணி பாடகி தான்.
ஆம், இவர் தனது சிறு வயதிலேயே தெனாலி படத்தில் இடம்பெற்ற ’ஆலங்கட்டி’ பாடலை பாடியுள்ளார். இதை தொடர்ந்தும் தமிழ் படங்களில் இடம்பெற்ற பல பாடலுக்கு பாடியுள்ளார்.
இதோ அவருடைய புகைப்படங்கள்..