மது போதையில் விமான நிலையத்தில் ரகளை செய்த பாடகரும், பிக்பாஸ் பிரபலமுமான வேல்முருகன்- பரபரப்பு வீடியோ
வேல்முருகன்
சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் வேல்முருகன்.
முதல் பட பாடலே அவருக்கு பெரிய ரீக் கொடுக்க நாடோடிகள், ஆடுகள்ம் என அடுத்தடுத்த படங்களில் பாடி வெற்றிக்கண்டார். வரிசையாக வந்த பாடல் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் வேல்முருகன் தான்.
மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களை சேர்த்த இவர் தொலைக்காட்சி பக்கமும் வந்தார், நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.
விமான நிலையம்
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்த வேல்முருகன் அங்கிருந்த சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி செல்ல வேண்டியிருந்ததால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரை மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான சோதனை செய்துள்ளனர், அப்போது வேல்முருகன் குடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் அறிவிக்க அவர் விமானத்தில் பயணம் செய்யவும் மறுக்கப்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இறுதியில் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாதால் வேறொரு விமானத்தில் அவரை திருச்சி அனுப்பி வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் அவர் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.