அன்று இசையமைப்பாளர்கள், இன்று தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்.. யார் தெரியுமா
சினிமாவில் பல திறமைகளை கொண்டுள்ள நட்சத்திரங்கள் பலர் உள்ளனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக இருந்து தற்போது, முன்னணி நடிகர்களாக பல ரசிகர்களை சம்பாதித்து புகழின் உச்சத்தில் வலம் வரும் நடிகர்கள் குறித்து கீழே காணலாம்.
ஹிப்ஹாப் ஆதி:
ஹிப்ஹாப் ஆதி விஷால் நடிப்பில் வெளியான "ஆம்பள" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, பல இசை ஆல்பங்களை உருவாக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் "மீசைய முறுக்கு" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகனாகவும், இயக்குனராகவும் வலம் வந்தார். தற்போது, சமீபத்தில் இவர் நடிப்பில் "கடைசி உலகப் போர்" என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நான் சென்றால், எழுந்து நின்று கொள்வார்.. ரஜினிகாந்த் குறித்த ரகசியத்தை கூறிய ராயன் பட நடிகை துஷாரா விஜயன்
விஜய் ஆண்டனி:
விஜய் ஆண்டனி "சுக்கிரன்" என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, பல படங்களில் இசையமைத்து உள்ளார்.
இசையமைப்பாளராக ஜொலித்து கொண்டிருந்த இவர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளியான "நான்" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இந்த ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் "ரோமியோ", "மழை பிடிக்காத மனிதன்" மற்றும் "ஹிட்லர்" ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
