Singham Again: திரை விமர்சனம்
அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள Singham Again இந்தி படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைகளம்
தேடப்படும் பயங்கரவாதி ஓமர் ஹபீஸை DCP பாஜிராவ் சிங்கம் காஷ்மீரில் கைது செய்கிறார். அதனைத் தொடர்ந்து பெரியளவில் போதைப்பொருள் கடத்தும் கும்பலையும் சிங்கம் பிடிக்கிறார்.
டேங்கர் லங்கா என்ற கடத்தல் கும்பலின் தலைவன் தனது ஆட்களுடன் வந்து சிங்கத்தின் மனைவி அவ்னியை கடத்தி செல்கிறார். அதன் பின்னர் சிங்கம் தனது மனைவியை மீட்டாரா? டேங்கர் லங்கா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
Cop யூனிவர்ஸில் ஒன்றாக இப்படமும் இணைந்துள்ளது. அக்ஷயகுமார் நடித்த சூர்யாவன்ஷி படத்தின் கிளைமேக்சில் வீர் சூர்யாவான்ஷியுடன் சேர்ந்து பயங்கரவாதி ரியாஸ் ஹபீஸை, சிங்கம் (அஜய் தேவ்கன்) கொலை செய்திருப்பார்.
அதன் தொடர்ச்சி இப்படத்தில் வருவதால் சூர்யாவன்ஷி படத்தை பார்த்தால் வில்லனின் கதாபத்திரம் குறித்து விரிவாக தெரியும். ராமாயண கதையை போலீஸ் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு இந்த சிங்கம் அகைன் படத்தை எடுத்துள்ளார் ரோஹித் ஷெட்டி.
ஆனால் காட்சிக்கு காட்சி ராம் லீலா நாடகத்தை காட்டி மறுபுறம் ராமனாக அஜய் தேவ்கன் தன் மனைவியை மீட்க போராடுவதை காட்டுவதும் அயற்சியை ஏற்படுத்துகிறது. போலீஸ் அதிகாரிகளை எல்லாம் ராமனுக்கு உதவும் அனுமன், ஜடாயு போன்ற ராமாயண கதாபாத்திரங்களாக மாற்றி வைத்து சோதித்திருக்கிறார் இயக்குநர்.
ஆரம்பத்திலேயே கதை தெரிந்து விடுவதால் எந்த காட்சியும் சுவாரஸ்யம் இல்லாமலேயே நகர்கிறது. அதிலும் தீபிகா படுகோனேவுக்கு கொடுக்கப்பட்ட பில்டப் எல்லாம் ரொம்ப ஓவர். அவர் லேடி சிங்கம் என்று கூறும்போது சிரிப்புதான் வருகிறது.
வில்லனாக வரும் அர்ஜுன் கபூர் பெரிதாக எந்த வேலையும் செய்யவில்லை. படத்தின் கதை காஷ்மீரில் தொடங்கி இலங்கைக்கு செல்கிறது. ஆனால் இடையில் மதுரை என்று இயக்குநர் காட்டியது செட் என்று அப்பட்டமாக தெரிகிறது.
தமிழ்நாடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் தப்பி தவறி கூட யாரும் தமிழில் பேசிவிடக் கூடாது என்பதில் படக்குழு விழிப்பாக இருந்தது போல் எல்லாரும் இந்தியிலேயே பேசுகிறார்கள். ஆனால் நடிப்பவர்கள் தமிழ் நடிகர்கள்.
கிளைமேக்சிலில் அஜய் தேவ்கனுடன் அக்ஷய் குமாரும் சேர்ந்து கொள்கிறார். எனினும் அந்தளவுக்கு சண்டைக்காட்சி இல்லை. ஒட்டுமொத்தமாக ராமாயணத்தை கொண்டு வந்து சொதப்பி வைத்திருக்கிறார் இயக்குநர்.
க்ளாப்ஸ்
ஒரு சில ஸ்டண்ட் காட்சிகள்
ஒளிப்பதிவு
மைனஸ்
வலுவில்லாத திரைக்கதை
சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள்
மொத்தத்தில் பெரிய பட்ஜெட்டில் போலீஸ் அமைப்பை வைத்து எடுக்கப்பட்ட ராமாயணம்தான் இந்த சிங்கம் அகைன்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
