முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்
சிறகடிக்க ஆசை
பைனான்ஷியர் மூலம் சதி செய்து அண்ணாமலை குடும்பத்தை வீட்டிலிருந்து வெளியேற்றி, அந்த வீட்டிற்கு சீல் வைத்துவிட்டார் சிந்தாமணி. ஜப்தி செய்யப்பட்ட வீட்டை மீட்க முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோர் முயற்சி செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சிந்தாமணி தான் இவை அனைத்திற்கும் காரணம் என தெரிந்து அதிர்ச்சியடைந்தார் விஜயா. வீடு திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் மீனா பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவி பதவியில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும் என சிந்தாமணி கூறியிருந்தார். ஆனால், இதற்கு முத்து சம்மதம் தெரிவிக்கவில்லை.
இடியை இறக்கிய சிந்தாமணி
தங்களுடைய வழக்கறிஞரை முத்துவும் மீனாவும் சந்தித்து வீட்டை மீட்க பேசியபோது, ரூ. 10 லட்சம் கட்டினால் தற்காலிகமாக வீட்டை மீட்கலாம் என அவர் கூற, ரூ. 10 லட்சத்தை புரட்ட முத்து, மீனா முயற்சி எடுத்து வந்துகொண்டிருக்கும் நிலையில், சிந்தாமணி மற்றொரு இடியை முத்து தலையில் இறக்கியுள்ளார்.

அதாவது, இன்னும் 2 நாட்களுக்குள் அண்ணாமலை வீட்டை ஏலத்திற்கு விடவேண்டும் என பைனான்ஷியர் மூலம் நீதிமன்றத்தில் பேசி அதற்கான உத்தரவை அண்ணாமலை குடும்பத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் சிந்தாமணி.

ஏற்கனவே பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் 2 நாட்களுக்குள் எப்படி அந்த வீட்டை முத்துவும் மீனாவும் மீட்க போகிறார்கள் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்னென்ன ட்விஸ்ட் சிறகடிக்க ஆசை சீரியலில் நமக்காக காத்திருக்கிறது என்று.
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri