வீட்டை மீட்க 38 லட்சத்தை ஏற்பாடு செய்த முத்து.. சிந்தாமணி சூழ்ச்சியால் திருடப்படும் பணம்! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது முத்துவும் மீனாவும் தங்களது வீட்டை மீட்பதற்காக போராடி வருகிறார்கள்.

வீட்டை மீட்க ரூ. 38 லட்சம் பணம் தேவைப்படும் நிலையில், அதற்காக பைனான்சியர் மூலம் கடன் வாங்கி அந்த பணத்தை ஏற்பாடு செய்கிறார் முத்து.
சிந்தாமணி சூழ்ச்சி
அப்பாடா எப்படியோ வீட்டை ஜப்தி செய்யாமல் முத்து மீட்டு எடுத்துவிட்டார் என பெருமூச்சு விடும் நேரத்தில், சிந்தாமணி அந்த பணத்தை திருட திட்டம் போடுகிறார். அதன்படி, மீனாவின் வண்டியில் ரூ. 38 லட்சம் பணம் இருப்பதை தெரிந்துகொண்டு, இரு அடியாட்களை அனுப்பி அந்த பணத்தை சிந்தாமணி திருடிவிடுகிறார்.

வீட்டை ஏலத்திலிருந்து மீட்பதற்காக முத்து கடன் வாங்கிய ரூ. 38 லட்சத்தை தற்போது மீனா பறிகொடுத்துள்ளார். இதன்பின், அந்த வீடு ஏலத்திற்கு வரப்போகிறதா அல்லது திருடிய பணத்தை மீட்டு, ஏலத்தில் உள்ள வீட்டை காப்பாற்றுவாரா முத்து; பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri