சிந்தாமணி சூழ்ச்சியால் வசமாக சிக்கிக்கொண்ட மீனா, சந்தோஷத்தில் விஜயா.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வார எபிசோடில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற லீட் கொடுத்திருந்தார்கள்.
மீனா தனக்கு ரூ 2 லட்சத்திற்கான ஆர்டர் கிடைத்தது குறித்து வீட்டில் கூற விஜயா-மனோஜ்-ரோஹினியை தாண்டி மற்ற அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். பின் விஜயா இந்த விஷயத்தை சிந்தாமணியிடம் கூற இந்த ஆர்டர் என்னால் தான் கிடைத்தது.
இதற்கு பிறகு மீனா இந்த தொழிலை விட்டே ஓட போகிறார், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து காணுங்கள் என்று கூறியிருந்தார்.
புரொமோ
இந்த வாரத்திற்கான புரொமோவில், மீனா தான் முடித்த வேலைக்காக மீதி பணத்தை கேட்கிறார். ஆனால் மண்டப உரிமையாளர் அன்றைக்கு பணம் கொடுத்து விட்டேனே, நீங்கள் கையெழுத்தும் போட்டு கொடுத்தீர்களே என கூற மீனா ஷாக் ஆகிறார்.
இதனால் மீனா கண்ணீரோடு என்ன செய்வது என்று தெரியாமல் அழுகிறார்.
சிந்தாமணி இந்த விஷயத்தை விஜயாவிடம் கூற அவரோ மீனாவிற்கு ரூ. 2 லட்சம் நஷ்டம் அதுவே எனக்கு சந்தோஷம் என்கிறார். இதோ புரொமோ,