அந்த விஷயத்தால் தான் முத்துவை வெறுத்தாரா விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, அடுத்து என்ன நடக்கும், ரோஹினி சிக்குவாரா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறார்கள்.
ஆனால் சீரியல் குழுவினரோ இப்போதைக்கு ரோஹினி சிக்க மாட்டார் என்பது போலவே கதையை கொண்டு செல்கிறார்கள். இன்றைய எபிசோடில் முத்து, க்ரிஷ் மீது கோபமாக உள்ள அந்த பையனின் அப்பாவை பார்த்து கெஞ்சுகிறார்.
கடைசியில் அந்த பையனின் அப்பா க்ரிஷிற்கு ஒரு டெஸ்ட் வைப்பேன் அதன்பின் முடிவு எடுக்கிறேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து முத்து-மீனா குடும்பத்துடன் பேசும்போது, மனோஜ் இவனை போல க்ரிஷும் சீர்திருத்த பள்ளிக்கு தான் செல்ல போகிறான் என கூற முத்து கோபப்படுகிறார்.
புரொமோ
தற்போது வெளிவந்துள்ள சிறகடிக்க ஆசை புரொமோவில், பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறுகிறது. விஜயா ஒருவரிடம் ஜோசியம் பார்க்கிறார், அவர் உங்களது 2வது மகனால் உங்கள் உயிருக்கு ஆபத்து என கூறுகிறார்.
இதனால் விஜயா தனது மாமியார் வீட்டிலேயே முத்துவை விட்டுவிட்டு செல்கிறார். இதோ புரொமோ,